எண்ணை சுத்திகரிப்பு ஆலையத்தில் பயங்கர தீ..! கிராம மக்கள் அச்சம்..!
விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எண்ணை சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. அங்கு புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுத்திகரிப்பு பிரிவில் திடீரென எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனே அங்கிருந்த ஊழியர்களின் நலனை கருதி சைரன் ஒழிக்கப்பட்டு, பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஆலைக்கு அருகில் உள்ள கிராமப்புற வாசிகள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
