விசா இல்லாமலே இந்த நாடுகளுக்கு ஹனிமூன் போலாம் - 10 ஆசிய நாடுகளின் பட்டியல் இதோ !
திருமணமான புதுமண தம்பதிகள் விசா இல்லாமலே வெளிநாட்டில் ஹனிமூன் செல்லலாம் .
புதுமண தம்பதிகள்
திருமணமான புதுமண தம்பதிகள் ஹனிமூனுக்காக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். இதற்கு விசா தேவை படுகிறது.சில நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய மக்களுக்கு அந்நாட்டிற்குச் செல்ல விசா எடுக்கத் தேவையில்லை. நம் நாடு பாஸ்போர்ட் அல்லது ஆன்-அரைவல்-விசா இருந்தால் மட்டும் போதுமானது.
அந்த வகையில் விசா தொந்தரவு இல்லாமல் பயணம் செய்யக் கூடிய 10 நாடுகள் பற்றிப் தெரிந்துகொள்ளலாம். இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ், சீஷெல்ஸ், பூட்டான், நேபாளம், பார்படாஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஜோடியாகச் செல்லலாம்.இங்கு விசா இல்லாமல் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் விசா இல்லாத இந்தியர்களுக்கான நாடுகளின் நிபந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் நீங்கள் சேரும் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, குறைந்தபட்சம் 6 மாத செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் திரும்புவதற்கான சான்று அல்லது முன்னோக்கி டிக்கெட்டை வழங்க வேண்டும்.
விசா
பயணத்தின் போது உங்களுக்கு வசதியாக இருக்க உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிதி இருப்பதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும். நீங்கள் தங்கியிருக்கும் காலத்திற்கான தங்குமிடத்திற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும்.
உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை எடுத்துச் செல்ல வேண்டும். சேரும் நாட்டின் விதிமுறைகளின்படி மதிப்புமிக்க பொருட்களை நீங்கள் எடுத்துச் சென்றால், சுங்க அறிவிப்பு படிவங்களை முறையாக நிரப்ப வேண்டும். செல்லும் நாடு கட்டாயப்படுத்தினால், நீங்கள் பயணக் காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும்.