விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு : குற்றவாளிகளை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

viruthunagarsexualassault courtcustodyapproved accusedinjail collectivesexualabuse
By Swetha Subash Mar 29, 2022 02:00 PM GMT
Report

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற்றதை அடுத்து குற்றவாளிகளை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுவர்கள் நால்வரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு : குற்றவாளிகளை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு | Viruthunagar Sexual Assault Accused Under Court

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி ஆலோசனைகளை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் 7 நாட்கள் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது.

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு : குற்றவாளிகளை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு | Viruthunagar Sexual Assault Accused Under Court

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த ( பொறுப்பு ) நீதிபதி கோபிநாத் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என உத்தரவிட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள நால்வரையும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது,  நால்வரையும் வரும் ஏப்ரம் 4 ஆம் தேதி மாலை வரை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து நால்வரும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.