ஜெபக்கூட்டம் நடத்துவதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாதிரியாரின் கேடுகெட்ட செயல்
விருதுநகரில் ஜெபக்கூட்டம் நடத்துவதாக கூறி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரைட்டான் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அதே பகுதியில் சிவகாசியை சேர்ந்த பாதிரியார் கிறிஸ்துதாஸ் என்பவர், வீடுகளுக்கு சென்று ஜெபக்கூட்டம் நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த 11வயது சிறுமி வீட்டிற்கு சென்ற அந்த பாதிரியார் அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.