மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தையை ஏற்க மறுத்த கொடூர பெற்றோர்! நிற்கதியான பச்சிளம் குழந்தை! இனி எப்படி தனியாக வாழும்?

baby parents viruthunagar not accepted specially abled
By Anupriyamkumaresan Jul 30, 2021 02:43 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர்கள் ஏற்க மறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி சங்கிலி - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு கடந்த ஜூலை 8-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தையை ஏற்க மறுத்த கொடூர பெற்றோர்! நிற்கதியான பச்சிளம் குழந்தை! இனி எப்படி தனியாக வாழும்? | Viruthunagar Baby Not Accepted By Parents

மருத்துவமனை வாயிலில் நின்று கொண்டிருந்த சங்கிலியிடம், முதலில் உங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுது நேரம் கழித்து, தவறாக கூறிவிட்டோம் தங்களுக்கு அன்னப்பிளவு குறைப்பாட்டுடன், கை, கால் விரல்கள் ஒட்டிய நிலையில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த சங்கிலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து குழந்தைக்கும், பெற்றோர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில், அந்த பெண் குழந்தை சங்கிலி - சுப்புலட்சுமி தம்பதியினரின் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. எவ்வளவு கூறியும் அந்த குழந்தையை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால், சட்ட ரீதியாக தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தையை ஏற்க மறுத்த கொடூர பெற்றோர்! நிற்கதியான பச்சிளம் குழந்தை! இனி எப்படி தனியாக வாழும்? | Viruthunagar Baby Not Accepted By Parents

அங்கு அந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஆயிரம் பேர் குழந்தையின்றி தவிக்கும் இந்த சூழலில், மாற்றுத்திறனாளி என்ற ஒரு காரணத்தால் பெற்ற குழந்தையை தூக்கி எறிந்து சென்ற இந்த கொடூர பெற்றோரால், அந்த பச்சிளம் குழந்தையே நிற்கதியாக நிற்கிறது.

பெற்றோர்கள் இருந்தே இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வளர முடியவில்லை. இனி வளர்ந்து வரும் நாட்களில், அந்த குழந்தையை இனி யார் பார்ப்பார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.