விருத்தாசலம் - கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞர் கைது
விருத்தாசலத்தில் கள்ள ஓட்டு போட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு பரபரப்பாக பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருத்தாசலம் நகராட்சி அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி வடக்கு கோட்டை வீதியில் உள்ள 24-வது வார்டு வாக்குச்சாவடியில்
கள்ள ஓட்டு போடுவதற்காக முயன்ற இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது விருத்தாசலம் சந்தோஷ்குமார் நகரை சேர்ந்த சங்கர் மகன் ஜீவா (வயது -23) என்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுச்சாவடி மையத்தை சிறுது நேரம் காவல்துறையினர் மூடி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்ய முயன்றதை அறிந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.