பரவும் கொடிய வைரஸ் - 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
திடீர் வயிற்று போக்கால் 98 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பு
கேரளா, வயநாட்டில் லகிடி ஜவஹர் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு மானவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
வயிற்று போக்கு
மேலும், இதுகுறித்து அதிகாரிகள் குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக தெரிவித்த நிலையில், பள்ளியின் கிணறுகளில் குளோரிநேஷன் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்தத் தொற்றின் காரணமாக 98 பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.