பெருந்தொற்றான கரும்பூஞ்சை நோய்: அதிர்ச்சியில் மக்கள்
கரும்பூஞ்சை நோயை ராஜஸ்தான் அரசு ஒரு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது.
மியூகோமைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும்.
உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பொதுமக்கள் அஞ்சி நடுங்கி வரும் நிலையில், இந்த கரும்பூஞ்சை நோய் பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே இந்த கரும்பு பூஞ்சை தாக்கி வருகிறது.
ராஜஸ்தான், மத்தியபிரதேச உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு இந்த கரும்பூஞ்சை நோயை ஒரு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் தொற்று நோய்கள் சட்டம் 2020-ன் கீழ் இதனை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.