பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்தவரின் இதயத்தில் புதிய வைரஸ் - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

United States of America
By Swetha Subash May 06, 2022 07:46 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

இதய நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட்டுக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டது.

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்தவரின் இதயத்தில் புதிய வைரஸ் - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் | Virus Found In Pig Heart That Transplanted To Man

எனினும் சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்த அவர் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 

ஆனால் அவரது மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அப்போது தெரிவிக்கல்லை.

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்தவரின் இதயத்தில் புதிய வைரஸ் - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் | Virus Found In Pig Heart That Transplanted To Man

இந்நிலையில், டேவிட் பென்னட்-இன் இதய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்ததில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயத்திற்குள் டி.என்.ஏ போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் மூலம், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை பொருத்துவதால் புதிய தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.