பரவும் வைரஸ் காய்ச்சல் - பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை

Puducherry
By Thahir Mar 15, 2023 05:21 AM GMT
Report

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1- 8 ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை 

அண்மை நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் என்பது அதிகரித்து வருகிறது. 

virus fever - 11 days Leave for schools

அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரும் இடங்களில் ஒன்று புதுச்சேரில் இங்கு கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் என்பது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைரஸ் காய்ச்சல் பரவலை தொடர்ந்து 16 ஆம் தேதி முதல் வருகிற 26 ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.

இதையடுத்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 11 நாட்கள் விடுமுறை அளித்த உத்தரவிட்டுள்ளது புதுச்சேரி அரசு.