நடிகர் சூர்யா முன் குட்டை பாவடையில் அதிதியுடன் கபடி விளையாடிய கார்த்தி

Karthi Suriya Viral Video Viruman
By Sumathi 3 மாதங்கள் முன்

விருமன் திரைப்பட வெற்றிவிழாவில் அதிதி ஷங்கருடன், கார்த்தி கபடி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருமன்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் கடந்த வார வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை பலர் திட்டி தீர்த்து வந்தாலும், குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் படமாக அமைந்ததால் வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம்.

நடிகர் சூர்யா முன் குட்டை பாவடையில் அதிதியுடன் கபடி விளையாடிய கார்த்தி | Viruman Success Meet Viral Video

மேலும் இந்த படத்தின் மூலம் அறிமுகமாக இயக்குனர் சங்கர் மகளான அத்தி சங்கர் தனது முதல் பட நடிப்பிலே ரசிகர்களை அள்ளி விட்டார். நடிப்போடு மட்டும் நிறுத்தாமல் பாடகியாகவும் களமிறங்கியுள்ளார்.

 அதிதி ஷங்கர்

இவர் பாடிய மதுர வீரன் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் எப்போதும் கிராம கதைகளுக்கு அப்படியே ஒத்துப்போகும் நடிகர் கார்த்தியின் நடிப்பு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ளது.

மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடை 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

கார்த்தியுடன் கபடி

தற்போது வரை தொடர்ந்து விருமன் படம் வசூலை அள்ளி வரும் நிலையில், இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் விதமாக வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் ந்டிகர் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், அதிதி ஷங்கர் குட்டை பாவடையில் கார்த்தியுடன் கபடி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

படத்தின் லாபத்தில் ரூபாய் 25லட்சத்தை நடிகர் சூர்யா நடிகர் சங்கத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.