இயக்குநர் ஷங்கரின் மகள் முத்தையா இயக்கத்தில் அறிமுகம்

Shankar Viruman AditiShankar Karthi Surya
By Irumporai Sep 05, 2021 04:07 PM GMT
Report

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகும் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி நடிக்கும் படத்தை முத்தையா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் கொ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி முத்தையா இணையும் படத்திற்கு விருமன் என தலைப்பு வைத்துள்ளனர்.

படத்தின் தலைப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. யுவன் இசையமைக்கிறார். இப்படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் விருமன் திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகியமாக அறிமுகமாகிறார். கார்த்தி- அதிதி ஷங்கர் இப்படத்தில் நாயகன்- நாயகியாக நடிக்கிறார். இதனாலேயே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.