விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி
விருகம்பாக்கம் தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல்6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு தேமுதிக வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.