விருதுநகர் இளம் பெண் பாலியல் வழக்கு - சிபிசிஐடி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை..!
விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இளம் பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிகரன் உள்ளிட்ட 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு 4 பேரை அழைத்து வந்து இன்று 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள 4 பேரில் மாடசாமியை அவரது வீட்டிற்கு நேரில் அழைத்து வந்து சிபிசிஐடி டி.எஸ்.பி வினோதினி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாடசாமி வீடு மற்றும் அவரது வீட்டின் அருகில் உள்ள பாலியல் வழக்கில் பாதிக்கபட்ட இளம் பெண்ணின் வீட்டிற்கு அழைத்து சென்று நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
மாடசாமியை சம்பவ இடத்தில் வைத்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர்