விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பாரிய வெடி விபத்து : 17 பேர் பலி!

Tamil nadu Accident
By Vinoja Apr 19, 2026 12:58 PM GMT
Report

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டி வனஜா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகிய நிலையில் பலரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பாரிய வெடி விபத்து : 17 பேர் பலி! | Virudhunagar Fireworks Factory Blast 17 Died

தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்ததாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.