விருதுநகரில் பெரும் சோகம் , பட்டாசு ஆலை வெடி விபத்து : 25 வயது இளைஞர் பலி

By Irumporai May 04, 2022 03:44 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு அறை தரைமட்டமானதில் சோலை விக்னேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும்,மறுபுறம் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,பட்டாசுக்கு தேவையான மூலப் பொருட்களை கலவை செய்யும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விருதுநகரில் கடந்த நான்கு மாதங்களில் 7 பட்டாசு ஆலை வெடி விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.