சாத்தூர் அருகே பயங்கரம்: பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

recover tamilnadu rahul gandhi
By Jon Feb 12, 2021 07:05 PM GMT
Report

விருதுநகர் அருகே அச்சங்குளம் பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியானார்கள். பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த அறைகள் வெடித்து சிதறியதில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

மேலும் 10க்கும் அதிகமான தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் பெண் உட்பட 12 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 24 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் கண்ணன் இந்த சம்பவம் குறித்து கூறும் போது, ஆலை முறையான உரிமம் பெற்று இயங்குகிறது. மற்ற விபரங்கள் ஆய்வுக்கு பிறகு தான் தெரியவரும்.என்றார். இந்த நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு, நிவாரண உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் தமிழகத்தின் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப்படுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள்,” என தமிழில் குறிப்பிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.