விருதுநகர் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கும் விஐபிக்கள் - களத்தில் இறங்கிய முக்கிய நபர்
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகரை மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது பெண்ணும், மேலத்தெருவைச் ஹரிஹரன் என்ற 27 வயது இளைஞர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனிடையே இருவரும் தனிமையில் இருந்ததை அந்த பெண்ணுக்கே தெரியாமல் ஹரிஹரன் வீடியோ எடுத்துள்ளார். இதனை தன்னுடைய 3 நண்பர்களுக்கு போட்டு காண்பிக்க அவர்கள் அனைவரும் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஹரிஹரனிடம் சொல்லி உள்ளார்கள்.இதற்கு ஹரிஹரனும் சம்மதித்துள்ளார்.

இப்படி ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது என 8 பேர் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் 18ம் தேதி வரை அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்தப் பெண் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதை தாண்டி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் 2 பேர் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்ததாக 8 பேரில் 4 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தான் அதிர்ச்சியளிக்ககூடிய விஷயம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், 8 பேர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியாக அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார். திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்லாது பல பெண்களையும் இதற்கு முன்பு நாசம் செய்துள்ளதாக கூறப்படுவதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூக நலத்துறை ஆலோசனையின்பேரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் 4 பேர் மதுரையில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்கள் என்பதால் விசாரணையை மிக கவனமாக நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக பெண்ணின் ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டதா? அல்லது வேறு யாருக்காவது அனுப்பப்பட்டதா? என்பது பற்றின தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan