சிறுநீரில் வேகவைத்த முட்டை; விரும்பி உண்ணும் மக்கள் - அதில் அப்படி என்ன இருக்கு?
சிறுநீரில் வேகவைத்த முட்டையை சீனர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
விர்ஜின் பாய் எக்
சீனாவில் வசிக்கும் மக்கள் மத்தியில் சில வினோத பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன. அந்த வரிசையில், தவளை, பாம்பு என ஓடுவது பறப்பது எல்லாம் அடங்கும்.
குறிப்பாக "விர்ஜின் பாய் எக்" எனப்படும் வேக வைத்த முட்டையை பிப்ரவரி - ஏப்ரல் மாத காலங்களில் சீன மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர். பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கர்களின் யூரினில் வேகவைத்து இந்த முட்டை தயாரிக்கப்படுகிறது.
சீனர்கள் விருப்பம்
டோங்யாங் என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது. முட்டையை வேகவைப்பதற்காக ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களின் சிறுநீரை பக்கெட் உள்ளிட்டவற்றில் அங்குள்ள மக்கள் சேகரிக்கின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள கடைக்காரர்கள், "இந்த முட்டையை நீங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு வெப்ப தாக்கு ஏற்படாது. மூட்டுகளில் ஏற்படும் வலிகள் நீங்கும்.
வாசனைக்காகவும் இந்த சிறுநீரில் முட்டையை வேக வைக்கிறோம். இங்குள்ள அனைவருக்கும் மதிய உணவில் இந்த விர்ஜின் பாய்ஸ் எக் கண்டிப்பாக இருக்கும்” எனத் தெரிவிக்கின்றனர்.