Tuesday, Jul 15, 2025

புது லுக்கில் ஷேவாக் வெளியிட்ட புகைப்படம் - வைரலாக்கும் ரசிகர்கள்

Virender Sehwag Viral Photos
By Nandhini 3 years ago
Report

புது லுக்கில் ஷேவாக் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஷேவாக்

இந்தியாவின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் வீரேந்தர் சேவாக். இவர் வலது கை ஆட்டக்காரர். வலது கை பந்து வீச்சாளராகவும் விளையாடினார்.

1999ம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் , 2001ம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும் அறிமுகமானார். இவர், அருச்சுனா விருது, உலகின் விஸ்டன் முன்னணி துடுப்பாட்ட வீரர், ஐசிசி யின் 2010 ஆவது ஆண்டின் சிறந்த தேர்வு துடுப்பாட்ட வீரர், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

வைரல் புகைப்படம்

இந்நிலையில், வீரேந்தர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நியூ கூல் லுக்கில் இருக்கும் ஷேவாக்கை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.