20 ஆண்டுகள் திருமண வாழ்க்கை.. மனைவியை பிரியும் சேவாக்? அதிர்ச்சி தகவல்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வீரேந்தர் சேவாக்
சினிமா துறை மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களின் விவாகரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது அந்த வகையில், கடந்த ஆண்டு ஷிகர் தவான், முகமது ஷமி ,ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்தனர்.
அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்பொழுது ஜாம்பவானான வீரேந்தர் சேவாக்வும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூ டெல்லியைச் சேர்ந்த ஆர்த்தி அஹ்லாவத் என்பரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இல்லத்தில் நடந்தது.
விவாகரத்து
இந்த தம்பதிக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் என இரு மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக இருவரும் எந்த ஒரு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்வதில்லை என்றும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
2015 ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற வீரேந்தர் சேவாக் தற்பொழுது வர்ணனையாளராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.