பயம்னா என்னான்னே தெரியாது அவருக்கு - விரேந்தர் சேவாக் பாராட்டு
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இயான் மார்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிக சிறந்த முறையில் இருந்ததன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மிக சுலபமாக வெற்றியை பெற்றது.
அந்த போட்டியில் சுப்மன் கில் 34 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அசத்தினார், இந்நிலையில் சுப்மன் கில் குறித்து இந்திய அணியில் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், கில் அந்த போட்டியில் மிக சிறந்த முறையில் விளையாடினார் அவர் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை, எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் நான் அதிரடியாக தான் விளையாடுவேன் என்ற கண்ணோட்டத்தோடு விளையாடினார்,
அவருக்குப்பின் ஒன்பது பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர் எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்க தேவையில்லை என்று பாராட்டினார்.
மேலும் பேசிய அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் தனது அபார திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்,
ஆனால் இவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ வேண்டும் என்றால் மனதளவில் அவரை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,
அப்படிதான் முன்னாள் இருந்த வீரர்கள் தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டனர்.
2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் திணறி வந்த சுப்மன் கில் 7 போட்டிகளில் பங்கேற்று வெறும் 132 ரன்கள் அடித்திருந்தார்.
ஆனால் இரண்டாம் பாதியில் நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டி சுப்மன் கில்லுக்கு ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று விரேந்தர் சேவாக் தெரிவித்தார்.