இதிலும் தோற்றால் விராட் கோலி காலி! அதன் பின் இவர் தான் கேப்டன்! முன்னாள் வீரர் அதிரடி!
விராட் கோலி தலைமையில் இந்திய அணி சர்வதேச அளவில், 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர், 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகிய 3 தொடர்களில், இந்திய அணி முக்கிய கட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.
2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை கைப்பற்றியதன் பின்னர் தற்பொழுது வரை இந்திய அணி ஒரு சர்வதேச ஐசிசி தொடரை கைப்பற்ற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பல இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்திலும் வருதத்திலும் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த உடனே பலர் விராட் கோலி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட தவறுகிறது என பல கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.எனவே புதிய கேப்டனை இந்திய அணிக்கு நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் கூறி வருகின்றனர்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தீஸ் தாஸ்குப்தா ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார். உலகக் கோப்பை டி20 தொடருக்கு விராட் கோலி தான் கேப்டன், அக்டோபர் மாதத்தில் உலக கோப்பை டி20 தொடர் நடக்க இருக்கின்றது. தற்பொழுது உள்ள கால அளவு வெறும் 3 –4 மாதங்கள் தான். எனவே தற்போது இந்திய அணிக்கு ஒரு புதிய கேப்டனை நியமிப்பது சரியாக இருக்காது.
எனவே விராட் கோலி தான் உலக கோப்பை டி20 தொடருக்கு கேப்டனாக செயல்படுவார். திடீரென இந்த இடைவெளியில் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டால், அவரது தலைமையில் வீரர்கள் விளையாட சற்று நேரம் தேவைப்படும். எனவே அதனை போட்டு தற்பொழுது ஒரு கேப்டனை மாற்றுவது சரியாக இருக்காது, எனவே விராட் கோலி உலக கோப்பை டி20 தொடருக்கு கேப்டனாக இருப்பார்.
விராட் கோலி மீண்டும் ஜெயிக்க தவறினால் ரோஹித் ஷர்மாவே கேப்டன் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் அவரது தலைமையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.