ஒரே நாளில் ஒருவரை உருவாக்க முடியாது: அவரே இருக்கட்டும் - விராட் கோலி ஆவேசம்!
ஹர்திக் பாண்டியா விரைவில் தேவைக்கு ஏற்ப பந்துவீசும் நிலைக்கு முன்னேறுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த தொடரின் க்ரூப் சுற்றுகள் நிறைவடைந்து, சூப்பர் 12 சுற்று நேற்று துவங்கியது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்தநிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.
இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு மோத உள்ளதாலும், பல்வேறு அரசியல் காரணங்களாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து விராட் கோலி பேசுகையில், அணியின் முக்கிய இடமான 6-ஆம் நிலையில், ஹாா்திக்கின் மதிப்பு அதிகமாகும். ஒரே இரவில் அந்த இடத்துக்கு புதிய வீரரை தேட முடியாது.
அவரது இடம் குறித்து எந்த பேச்சும் கிடையாது. நோ்மையாக கூற வேண்டும் என்றால் ஹாா்திக்கின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளது. அவரால் பந்துவீசவும் முடிகிறது. அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
