சுயநலம் இல்லாத வீரன் என்பதை நிரூபித்த விராட் கோலி - ரசிகர்கள் நெகிழ்ச்சி: கண்ணீர்
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சுயநலமில்லாமல் செய்த செயல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், நமீபியா அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நமீபியா அணி சார்பில் அதிகபட்சமாக வீஸ் 26 ரன்களும், பார்ட் 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகப்ட்சமாக ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ராஹ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பின் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், கே.எல் ராகுலும் அதிரடியான துவக்கம் கொடுத்தனர்.
ரோஹித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார். இதன் பின் கூட்டணி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – கே.எல் ராகுல் ஜோடி நமீபியாவின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்டு ரன் குவித்ததன் மூலம் 15.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.கே.எல் ராகுல் 54* ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 25* ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நமீபியா அணிக்கு எதிரான இந்த போட்டி, விராட் கோலிக்கு கேப்டனாக கடைசி போட்டி என்பதால் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் அல்லது ரோஹித் சர்மாவிற்கு பிறகாவது விராட் கோலி களமிறங்கிய ஓரிரு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுகொடுத்துவிட வேண்டும் என்றே கோலியை பிடிக்காத ரசிகர்களும் விரும்பியிருப்பார்கள், ஆனால் ரோஹித் சர்மாவிற்கு பிறகு சூர்யகுமார் யாதவ் களமிறங்கியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், தனக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கியதற்கான காரணத்தை விராட் கோலியே வெளியிட்டுள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், சூர்யகுமார் யாதவிற்கு இந்த தொடரில் விளையாடுவதற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சூர்யகுமார் யாதவை போன்ற இளம் வீரர்களுக்கு டி.20 உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவது மகிழ்ச்சியை கொடுக்கும். இதன் காரணமாகவே சூர்யகுமார் யாதவை எனக்கு முன்னதாக களமிறக்கினோம் என்று தெரிவித்தார்.
கடைசி போட்டி என்றால் அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆரவராத்துடன் விடைபெறும் வீரர்களுக்கு மத்தியில் விராட் கோலியின் பெருந்தன்மையான இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்க ராசியும் இருக்கா பாருங்க Manithan

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
