இதை செய்ய நாங்கள் தவறிவிட்டோமே - தோல்விக்கு பின் உருக்கமாக பேசிய விராட் கோலி: ரசிகர்கள் வேதனை
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று துபாயில் நடைப்பெற்றது. ஏற்கனவே பாகிஸ்தானுடன் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை உருவானது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்னும் ஹர்திக்பாண்டியா 23 ரன்களுமே எடுத்தனர். நியூஸிலாந்து அணியை பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த சூழலில் நேற்றைய நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே போட்டிக்கு பின் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியின் தோல்வி அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் போதுமான அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேன்கள் பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் மைதனாத்தில் களமிறங்கும்போதே எங்கள் உடல்மொழி சரியாக இல்லை. எப்பொழுது எல்லாம் அடித்து ஆட முயற்சி செய்தோமோ அப்போது எல்லாம் விக்கெட்டை இழந்தோம்.
நாங்கள் ஆடும் போட்டியை பல கோடி பேர் பார்க்கின்றனர். பலரும் மைதானத்திற்கு வருகின்றனர். இந்தியாவுக்காக ஆடுபவர்கள் அதை அனுபவித்து அதிலிருந்து உத்வேகம் பெற்று ஆட வேண்டும்.
இந்த இரண்டு போட்டியிலும் அதை செய்ய தவறவிட்டுவிட்டோம். பாஸிட்டிவாக தைரியமாக சில விஷயங்களை நாங்கள் செய்திருக்க வேண்டும். வெளியிலிருந்து அழுத்தங்களை புறம் தள்ளி பாஸிட்டிவ்வான கிரிக்கெட் போட்டியை ஆடி இருக்க வேண்டும், என விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
? ? We exactly know how to approach the matches ahead.#TeamIndia captain @imVkohli on how the side will go about their upcoming #T20WorldCup games. #INDvNZ pic.twitter.com/lChCoNorCQ
— BCCI (@BCCI) October 30, 2021