இதுக்கு மேல நான் என்னடா பண்ண முடியும்..? கண்ணீர் விட்ட விராட் கோலி: ரசிகர்கள் சோகம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பெங்களூர் அணி, ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளது.
புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூர் மற்றும் நான்காவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது.
ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராட் கோலி கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும் பெங்களூர் அணியால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்களும், தேவ்தட் படிக்கல் 21 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுப்மன் கில் 29 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
பவர்ப்ளே ஓவர்களில் கொல்கத்தா அணி அதிகமான ரன் குவித்திருந்தாலும், பவர்ப்ளேவிற்கு பிறகு பெங்களூர் அணி பந்துவீச்சில் பிரமாதமாக செயல்பட்டதால் போட்டி மீண்டும் பெங்களூர் அணியின் கைவசம் வந்தது. ஆனால் திடீரென களத்திற்கு வந்த சுனில் நரைன், டேனியல் கிரிஸ்டியன் வீசிய ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் விளாசி போட்டியை அப்படியே மாற்றினார்.
டேனியல் கிரிஸ்டியன் ரன்களை வாரி வழங்கினாலும், சாஹல், ஹர்சல் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரையும் வேறு வழியின்றி விராட் கோலி டேனியல் கிரிஸ்டியனுக்கே கொடுக்க, கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று, இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதியும் பெற்றது.
இந்தநிலையில், எலிமினேட்டர் போட்டி முடிந்ததும் கோலி கண் கலங்கிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவருடன் டிவில்லியர்ஸும் கண் கலங்கியது கேமராவில் பதிவாகி உள்ளது. கோலி மற்றும் டிவில்லியர்ஸ் கண்ணீர் விட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
