எது ரோஹித்தை நீக்கனுமா - ஆவேசத்தில் செய்தியாளர்களை சரமாரியாக திட்டிய விராட் கோலி! வைரலாகும் வீடியோ
சர்ச்சையை கிளப்ப வேண்டுமென்ற எண்ணத்தில் நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிடுங்கள் என விராட் கோலி ஆவேசமாக பேசியுள்ளார்.
டி 20 உலகோப்பை தொடரில், 2 சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று பாகிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தோல்வி பெரிதும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி கம்-பேக் தரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பளீச் பளிச் என்று பதிலளித்துள்ளார்.
ரோஹித் ஷர்மாவை டி-20 போட்டிகளில் இருந்து நீக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, இந்த போட்டிக்கு முன்பு கடைசியாக இந்திய அணி விளையாடிய போட்டியில் ரோஹித்தின் ஆட்டத்தை பார்த்தீர்களா என பதிலளித்து சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்த கோலி, நம்ப முடியவில்லை. சர்ச்சையை கிளப்ப வேண்டுமென்ற எண்ணத்தில் நீங்கள் கேள்வி கேட்க விரும்பினால், முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிடுங்கள். அதற்கு ஏற்பது போல பதில் சொல்லிவிடுகிறேன் என ஆவேசமடைந்தார்.
தொடர்ந்து கேட்கப்பட்ட மற்ற கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த விராட், பாகிஸ்தான் அணியின் ஆட்டம் எங்களை விஞ்சி இருந்தது. அதனால்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான் இதை ஒப்புக் கொள்கிறேன். இப்போதுதான் டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ளது.
ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி பயணம் முடிந்துவிட போவதில்லை. இந்திய கிரிக்கெட் அணி எந்த அணியையும் சாதாரணமாக எண்ணிவிடாது. நாங்கள் எதிர்த்து போட்டியிடும் ஒவ்வொரு அணியும் எங்களுக்கு முக்கியமான அணிதான். இதில் பாகுபாடு ஏதுமில்லை. நாங்கள் கிரிக்கெட்டை மதிக்கின்றோம், கிரிக்கெட்டை நேசிக்கின்றோம் என்று பேசினார்.