கோலி எப்போ போவருன்னு, இந்த ரெண்டு பேரும் வெயிட் பண்ணீருப்பாங்க போல : பாக்., முன்னாள் வீரர் காட்டம்
விராட் கோலி எப்போது விலகுவார் என ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் காத்திருந்தது போல தெரிகிறது என்று கடுமையாக சாடியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது.
இந்த அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள் இருக்கும் பொழுது, யாரும் எதிர்பாராத நேரத்தில் கேப்டன் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக சமூக வலை தளத்தில் பதிவிட்டு மீண்டுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பிசிசிஐ கொடுத்த அழுத்தமும் அவரை நடத்திய விதமும் தான் விராட் கோலி இத்தகைய முடிவை எடுப்பதற்கு காரணம். மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் ஒருவரை இந்த வகையில் நடத்துவது முற்றிலும் தவறு என்று பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்து வந்தனர்.
இதுகுறித்து ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் சிறப்பாக வழி நடத்தியதற்கு நன்றி. இனிவரும் காலங்களில் நன்றாக அமையட்டும்.' என பதிவிட்டிருந்தார்.
மற்றொரு இந்திய வீரரான கேஎல் ராகுல் தனது ட்விட்டர் பதிவில், 'அனைத்து விதங்களிலும் நீங்கள் சிறந்த கேப்டனாக இருந்தீர்கள். இவை அனைத்திற்கும் வெறும் நன்றி மட்டும் கூறி முடித்திட முடியாது. வாழ்த்துக்கள்.' என குறிப்பிட்டிருந்தார்.
இவை இரண்டையும் வைத்துப்பார்க்கையில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் எப்போது விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல தெரிகிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.
'கோலி மாதிரியான உலகத்தரம் மிக்க வீரர் கேப்டன் பதவியை உதறித்தள்ளிவிட்டால், அடுத்த கேப்டனாக நியமிப்பார்கள்?.
ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் இல்லை. தென்னாப்பிரிக்கா தொடரை அதனால்தான் விளையாடவில்லை. கே எல் ராகுல் அனுபவம் இல்லை. இப்போதுதான் சில போட்டிகளில் விளையாடி வருகிறார்.
பண்ட் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கிறார். ரோகித் சர்மா, கேஎல் ராகுல் இருவரும் கோலி தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கொடுத்த ரியாக்ஷனும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் இருவரும் விராட்கோலி எப்போது செல்வார்? என காத்திருந்தது போல தெரிகிறது.
மிகப்பெரிய வீரர் தனது கேப்டன் பொறுப்பை நன்றாக செய்து கொண்டிருக்கும் பொழுது விலகினால், சக வீரர்களுக்கு இவ்வளவு சாதாரணமான விஷயமாக எப்படி இருக்க முடியும்?. அதுதான் எனக்கு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.' என்று தெரிவித்தார்.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
