உலகக்கோப்பை - அத பண்ண என்ன தொந்தரவு பண்ணாதீங்க...கடுப்பான கோலி
உலகக்கோப்பை தொடர் வரும் 5-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.
உலகக்கோப்பை 50
ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் 5-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை என 10 அணிகள் பங்கேற்கின்றன.
2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடைபெறும் காரணத்தால், இந்த தொடரில் இந்திய அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும் என இந்திய அணியின் ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்து காத்துள்ளனர்.
கோலி வேண்டுகோள்
கடந்த 2011-ஆம் ஆண்டின் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கோலி - அஸ்வின் இருவரும் இந்த தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். இம்முறை இந்திய அணி கோப்பையை வென்றால், இரண்டு முறை கோப்பையை வென்ற இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் இருவரும் பெறுவார்கள். இதற்கிடையில் கோலி உலகக்கோப்பை குறித்து ட்வீட் ஒன்று செய்துள்ளார்.
அதில், உலகக்கோப்பையை முன்னிட்டு நண்பர்கள் யாரும் என்னை போட்டிக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்யவேண்டாம் என குறிப்பிட்டு போட்டியை வீட்டில் இருந்து கண்டுகளியுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.