விராட் கோலியின் திடீர் முடிவிற்கு பிசிசிஐ., காரணமா…?
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்தான பிசிசிஐ.,யின் நிலைபாட்டை பொருளாளரான அருன் தோமல் தெளிவுபடுத்தியுள்ளார்.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடத்திற்கும் மேலாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார்.
டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்சி மீது பல விமர்ச்சனங்கள் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
விராட் கோலி இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்,
ஆனால் விராட் கோலியோ திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி நாள் வரை ஆக்ரோஷமாகவும், உற்சாகமாகவும் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி வெறும் 24 மணி நேரத்தில் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் பிசிசிஐ., விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்ள நிர்பந்தித்திருக்கும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் யூகமாக உள்ளது.
விராட் கோலியின் இந்த திடீர் முடிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலர் பிசிசிஐ.,யை திட்டி தீர்த்து தங்களது வேதனையை குறைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விசயத்தில் பிசிசிஐ.,யின் நிலைபாட்டை பிசிசிஐ.,யின்
இது குறித்து அருன் தோமல் பேசுகையில், “கேப்டன் பதவியில் விலக வேண்டும் என பிசிசிஐ.,யோ, இந்திய அணியின் தேர்வாளர்களோ விராட் கோலியை நிர்பந்திக்கவில்லை.
அவர் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவு, நாங்கள் அதை மதிக்கிறோம். ஆனால் என்னை பொறுத்தவரையில் விராட் கோலி இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.