Thursday, May 15, 2025

பஞ்சாப் அணியுடனான போட்டியில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி

Virat Kohli Royal Challengers Bangalore TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம்  ஐபிஎல் தொடரில் 6500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.