இங்கிலாந்து வீரர்களுக்கு நரகத்தை காட்டிய விராட் கோலி- வைரல் வீடியோ
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உத்வேகம் அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன.
பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 272 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
60 ஓவர்களில் இந்த ரன்னை எட்ட வேண்டும் என்பதால் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட் செய்யும் முன்னர் சக வீரர்களுடன் விராட் கோலி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் இங்கிலாந்து விளையாடும் இந்த 60 ஓவர்கள் களத்தில் அவர்களுக்கு நரகமாக இருக்க வேண்டும் என்று கோலி உத்வேகம் அளித்தார். ஆனால் நரகத்துக்கும் மேலான கொடுமையை இங்கிலாந்து வீரர்கள் அனுபவித்தார்கள் என்பதே உண்மையில் நிகழ்ந்தது ஆகும்.
— pant shirt fc (@pant_fc) August 16, 2021