“வீதிக்கு வந்த விராட் கோலி” - தெருவில் சோளக்கதிர் விற்கும் வைரல் புகைப்படம்

விராட் கோலி virat\kohli
By Petchi Avudaiappan Jan 10, 2022 11:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

விராட் கோலி போலவே அச்சு அசலாக இருப்பவர் தெருவோர கடையில் சோளக்கதிர் விற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியாது. இவரை பற்றிய செய்திகள் மக்களிடையே எப்போதும் பேசு பொருளாகவே இருப்பது வழக்கம். 

இதனிடையே விராட் கோலி போல அச்சு அசலான தோற்றத்தில் இருப்பவர் குறித்த புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இவர் தெருவோரமாக மக்கா சோளக்கதிர் விற்பனை செய்து வருகிறார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு "எப்படி இருந்த கோலி இப்படி ஆகிட்டார்..." "கோலிக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா? " "வீதிக்கு வந்த விராட்..." என கிண்டல் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதேசமயம் பிரதமர் மோடி உள்ளிட்ட சில பிரபலங்களின் சாயல் கொண்ட நபர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.