ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி : விராட் கோலி புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 23,000 ரன்கள் எடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.
23K and counting...@imVkohli | #TeamIndia pic.twitter.com/l0oVhiIYP6
— BCCI (@BCCI) September 2, 2021
கோலி 18, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் விளையாடும்போது சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. குறைந்த இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.