என்னப்பா இது கோலிக்கு வந்த சோதனை : மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடிப்பு

ViratKohli INDvNZ worstrecord
By Irumporai Dec 03, 2021 11:54 AM GMT
Report

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது, காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்றைய போட்டியில் , டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது .இதில் சுப்மன் கில் 44 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய புஜாரா டக் அவுட் ஆகி வெளியேறினார் .இதன்பிறகு 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

இதில் விராட் கோலி எல்.பி.டபிள்யூ-வில் டக்அவுட் ஆகி வெளியேறினார். புஜாரா மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் கைப்பற்றினார் . அதோடு டக் அவுட்டாகி வெளியேறிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்துள்ளார்.

இது டெஸ்ட் கேப்டனாக விராட் கோலிக்கு 10-வது டக்அவுட் ஆகும். அதோடு கேப்டனாக அதிகமுறை டக்அவுட் ஆன வரிசையில் விராட்கோலி 2-வது இடத்தில் உள்ளார். இதில் நியூசிலாந்து அணியில் ஸ்டீபன் பிளமிங் 13 முறையும் , தென்னாப்பிரிக்கா அணியில் கிரேம் ஸ்மித் 10 முறையும் டக்அவுட் ஆகியுள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் விராட்கோலி இணைந்துள்ளார்.இதையடுத்து தோனி, ஆதர்டன், குரோஞ்ச் ஆகியோர் 8 முறை டக் அவுட் ஆகி கடைசி இடத்தில் உள்ளனர் .அதே சமயம் இந்திய அணியின் கேப்டனாக ஒரே வருடத்தில் விராட் கோலி 4 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

இதன் மூலம் ஒரு வருடத்தில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய அணி கேப்டன்கள் என்ற மோசமான சாதனையில் விராட் கோலி இணைந்துள்ளார்.