உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்!

Virat Kohli Royal Challengers Bangalore Cricket Dinesh Karthik IPL 2024
By Jiyath May 06, 2024 07:20 AM GMT
Report

பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக்கின் கேள்விக்கு விராட் கோலி பதிலளித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

தினேஷ் கார்த்திக் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியுள்ளது. அதில் 4 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்! | Virat Kohli Wife Comment Towards Dinesh Karthik

இதனிடையே பல்வேறு வீடியோக்களும் பெங்களூர் அணி சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு வந்த ஒரு கேள்வியை தினேஷ் கார்த்திக் படித்தார்.

சிவம் துபேவுக்கு பிரச்சனை? இதுதான் CSK அணியில் நடக்குது - போட்டுடைத்த பயிற்சியாளர்!

சிவம் துபேவுக்கு பிரச்சனை? இதுதான் CSK அணியில் நடக்குது - போட்டுடைத்த பயிற்சியாளர்!

விராட் கோலி பதில் 

அதில், கிரிக்கெட்டை தாண்டி எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார்? என்ற இடம்பெற்றிருந்தது. அப்போது உடனடியா விராட் கோலி "உங்கள் மனைவி தான்" என்று தினேஷ் கார்த்திக்கை நோக்கி பதிலளித்தார்.

உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்! | Virat Kohli Wife Comment Towards Dinesh Karthik

இதைக்கேட்டதும் தினேஷ் கார்த்திக் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து போனார். ஆனால், விராட் கோலியின் இந்த பதிலால் அங்கிருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல் ஒரு ஸ்குவாஷ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.