விராட் கோலி பதவி விலகியதற்கு இதுவா காரணம்? - ஆச்சரியப்பட்ட பிரபலம்

viratkohli t20worldcup2021
By Petchi Avudaiappan Sep 17, 2021 08:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 வகை கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஆச்சரியமாக உள்ளதாக இந்திய அணியின் முதன்மை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

3 வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக பதவி வகித்து வந்த விராட் கோலி சில தினங்களுக்கு முன் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பணிச்சுமையை கருத்தில் கொண்டு விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

கோலியின் இந்த திடீர் முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலியின் இந்த முடிவால் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் விராட் கோலியின் ஓய்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், உலகக் கோப்பை தொடருக்கு முன் விராட் கோலி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது என்றும், இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் மிகச் சிறந்த முறையில் விளையாடுவார் என்றும் இந்திய அணியின் முதன்மை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.