உலக கோப்பை போட்டியில் கெத்து காட்டப்போகும் விராட் கோலி - வைரலாகும் Work Out வீடியோ...!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நாளை வரை பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
வைரலாகும் வீடியோ
இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி New Look Styleலில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், விராட் கோலியின் அழகில் சொக்கி மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்கம் முக்கியமானது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விராட் கோலி வெறித்தனம் Work Out செய்கிறார்.
Mobility is key ?
— Virat Kohli (@imVkohli) October 12, 2022
Video credit - bhau @surya_14kumar pic.twitter.com/SjHH9l2g89