பழைய பார்முக்கு மீண்டும் திரும்பிய விராட் கோலி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Virat Kohli
By Nandhini Sep 05, 2022 06:11 PM GMT
Report

பழைய பார்முக்கு மீண்டும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர். 

விராட் கோலி

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார். 

சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். 3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது.

virat Kohli

பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

நேற்றைய போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 60 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் அவுட்டானார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் விராட் கோலியின் ரசிகர்கள் ‘கிங் இஸ் ஆல்வேய்ஸ் கிங்’ என பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.