வாவ்... இணையத்தை கலக்கும் விராட்கோலியின் அசத்தலான உடற்பயிற்சி வீடியோ - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலங்களில் சற்று தடுமாறினாலும் பின்னர் எதிரணியினரை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக கிட்டதட்ட சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதனால் விராட் கோலி ரசிகர்களால் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்ற கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார்.
ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடை பெற்ற விராட் கோலியால் கடைசி வரை 3 சாதனைகளை நிகழ்த்தவே முடியவில்லை என்பது சோகமான நிகழ்வாகும்.
இந்நிலையில், விராட்கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விராட்கோலி பளு தூக்கியை எடுத்து நெஞ்சில் வைத்து, பிறகு, தலைக்கு மேலே உயர்த்தி பிறகு அந்த அந்த பளு தூக்கியை கீழே போடுகிறார். இவரின் கடுமையான உடற்பயிற்சியைக் கண்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ -
Back to my favourite ??♂️. With my favourite @AnushkaSharma ❤️ pic.twitter.com/g4UnoNNZkx
— Virat Kohli (@imVkohli) May 3, 2022