‘ஓ...சொல்றியா மாமா...’ பாட்டுக்கு மாஸாக நடனமாடிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா திரைப்படம் வெளியானது. இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.
புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.
இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஒரு விருந்து நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடலுக்கு மாஸாக நடனமாடியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் கோலியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Virat Kohli Sir and his Dance move is wow. @Samanthaprabhu2
— Ayush Ranjan (@AyushRa15743279) April 28, 2022
mam Definitely Delighted to watch this. pic.twitter.com/NLvgth6gVQ