உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது... - ஆசிரியர் தின விழா - வாழ்த்து கூறிய விராட் கோலி

Virat Kohli Twitter
By Nandhini Sep 05, 2022 08:13 AM GMT
Report

ஆசிரியர் தின விழா

இந்தியாவில், ஆசிரியர் தின விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தின விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

virat-kohli-viral-twit

விராட் கோலி வாழ்த்து

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், எங்கள் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகள் அனைவருக்கும், எங்கள் சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று பதிவிட்டுள்ளார். தற்போது விராட் கோலியின் டுவிட்டர் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.