பாகிஸ்தானில் மண்ணில் விராட் கோலியை வரைந்த ரசிகர் - இணையதளத்தில் வைரலாகும் ஓவியம்..!

Virat Kohli Pakistan Viral Photos
By Nandhini Oct 30, 2022 10:57 AM GMT
Report

பாகிஸ்தானில் மண்ணில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை அவரது ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.

virat-kohli-viral-photo-pakistan-artist

பாகிஸ்தானில் விராட் கோலி புகைப்படம்

பாகிஸ்தானில் விராட் கோலிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் நகரில் விராட் கோலியின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. விராட் கோலியின் தீவிர ரசிகரான, பலுசிஸ்தானைச் சேர்ந்த கடானி என்பவர் மணற் கலையைப் பயன்படுத்தி அற்புதமான விராட் கோலியை வரைந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மீதான தனது அன்பைக் காட்டியுள்ளார். தற்போது, இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.