விராட் கோலியை சந்தித்து செல்பி எடுக்க ரூ.23000 செலவு செய்த ரசிகர் - வைரலாகும் புகைப்படம்
விராட் கோலியை சந்தித்து செல்பி எடுக்க ரூ.23000 செலவு செய்த ரசிகரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
தற்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 தொடரில் விராட் கோலி விளையாடி வருகிறார்.
செல்ஃபி எடுக்க ரூ.23000 செலவு செய்த ரசிகர்
இந்நிலையில், விராட் கோலியை சந்தித்து செல்ஃபி எடுக்க ஒரு ரசிகர் ரூ.23000 செலவு செய்துள்ளார்.
அசாமைச் சேர்ந்தவர் ராகுல் ராய். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். எப்படியாவது விராட் கோலியை சந்திக்க, அசாமிலிருந்து கவுகாத்திக்கு சென்றார். விராட் கோலி தங்கியிருக்கும் அதே ஓட்டலில் தங்கினார். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கோலியை சந்தித்து செல்ஃபி எடுத்துள்ளார்.
இது குறித்து ராகுல் ராய் கூறுகையில், விராட் கோலியை சந்தித்து செல்ஃபி எடுக்க, ரூ.23000 செலவு செய்தேன். எல்லாம் கோலிக்காகத்தான் இந்த ரிஸ்க் எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Virat Kohli's fan Rahul Rai spent Rs 23,400 to book a room in the same hotel where #ViratKohli was staying so that he could take a selfie with him.#ViratKohliFans #ViratGang pic.twitter.com/tzfW561GoR
— CricketCountry (@cricket_country) October 3, 2022