விராட் கோலியின் வெற்றி மாற்றத்திற்கு இவர்தான் காரணமாம்... - பிறந்த நாளில் ஸ்பெஷலா கேக் ஊட்டிய கோலி...! யார் அவர்?
விராட் கோலியின் வெற்றி மாற்றத்திற்கு காரணமான நபரின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விராட் கோலி பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
போட்டிகளில் சொதப்பிய கோலி
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். ஆனால், சமீப கடந்த ஆண்டுகளாக அவர் தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
சர்வதேச கிரிக்கெட் தொடங்கி, உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி, அவரின் போதாத நேரம் என்பது போல ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.
தொடர்ந்து விராட் கோலி சொதப்பி வந்ததால், அவரை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பலர் குற்றம் சாடினார்கள். இதனால் அவர் மனதளவில் மிகவும் சோர்வடைந்தார்.
விராட் கோலியின் சாதனைக்கு காரணம்
இந்நிலையில், தற்போது பழைய பார்முலாவிற்கு திடீரென மாறி சாதனை படைத்துள்ளார் விராட்கோலி. கோலியின் இந்த மாற்றம் உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாக ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
கோலியின் இந்த வெற்றிக் காரணம், இந்திய கிரிக்கெட் அணியின் மனோ தத்துவ நிபுணராக மீண்டும் பணியில் சேர்ந்த பேடி உப்டான்தான்.
பேடி உப்டான் கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். டிராவிட்டின் அறிவுறுத்தலின் படி, பேடி உப்டான் மீண்டும் இந்திய அணியில் வந்து இணைந்தார்.
இன்று விராட் கோலியின் பிறந்த நாளை விழாவில் இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, விராட் கோலி ஸ்பெஷலாக கேக்கை எடுத்து பேடி உப்டானுக்கு ஊட்டினார்.
தற்போது, பேடி உப்டானுடனும் இணைந்து விராட் கோலி பணியாற்றி வருகிறார். இதனால், விராட் கோலியின் மனஅழுத்தம் விலகி, தற்போது தான் பழைய விராட் கோலியாக திரும்பியுள்ளார்.
இதனையடுத்து, இந்தியாவுக்கு வெற்றியை விராட் கோலி தேடி தருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
cake ? cutting ✂️ in @imVkohli ❤️ https://t.co/47RD8nvJfm
— wear a mask.. stay safe, India??? (@deepakkrdipu10) November 5, 2022