செம்ம க்யூட்டா... தன் மனைவியுடன் செல்பி எடுத்து வெளியிட்ட விராட்கோலி - வைரல் போட்டோ

virat-kohli viral-photo Anushka-Sharma
By Nandhini Mar 29, 2022 10:01 AM GMT
Report

கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலங்களில் சற்று தடுமாறினாலும் பின்னர் எதிரணியினரை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக கிட்டதட்ட சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

அதனால் விராட் கோலி ரசிகர்களால் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்ற கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார்.

ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடை பெற்ற விராட் கோலியால் கடைசி வரை 3 சாதனைகளை நிகழ்த்தவே முடியவில்லை என்பது சோகமான நிகழ்வாகும்.

இந்நிலையில், விராட்கோலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படம், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம் -