பெங்களூர் அணியை மிரள வைத்த வருண் சக்கரவர்த்தி - மிரண்டு போன கோலி
அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினர்.
இருவர் மீதும் பலமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் கோலி, 5 ரன்களில் அவுட்டானார்.
படிக்கல் பவர் பிளே ஓவர் முடிவின் கடைசி பந்தில் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஆறு ஓவர்களில் 41 ரன்களை எடுத்திருந்தது பெங்களூர்.
கோலியை பிரசித் கிருஷ்ணாவும், படிக்கல்லை ஃபெர்கியூசன்னும் வெளியேற்றி இருந்தனர். தொடர்ந்து அறிமுக வீரர் பரத் 16 ரன்களில், ரசல் வேகத்தில் ஆட்டத்தின் 9-வது ஓவரில் வெளியேறினார்.
டிவில்லியர்ஸும் அதே ஓவரில் க்ளீன் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து மேக்ஸ்வெல், ஹசரங்கா, சச்சின் பேபி அவுட்டாகி வெளியேறினர்.
ஜேமிசன் ரன் அவுட்டானார். ஹர்ஷல் பட்டேல் மற்றும் சிராஜ் அவுட்டாகினர். வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பெங்களூர் அணி அதோடு ஒரு ரன் அவுட்டும் செய்திருந்தார் அவர். பெங்களூர் அணி மொத்தம் 62 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
19 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 92 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி வெற்றி இழக்கை எட்டியது.