டுவிட்டரில் 5 கோடி மேல் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் - பெருமையைப் பெற்றார் விராட் கோலி
டுவிட்டரில் 5 கோடி மேல் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
விராட் கோலி
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர். இவர் சமீபமாக தனது விளையாட்டில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் அவரின் போதாத நேரம் என்பது போல சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசன் தொடரில் சொதப்பினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ள அவர் நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
6 முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ள கோலி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். 3 போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனாலும் அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்தே வருகிறது.
பழைய பார்முக்கு திரும்பிய விராட் கோலி
தற்போது நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விராட் கோலி. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
டுவிட்டரில் சாதனைப் படைத்த விராட் கோலி
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டாராக இதுவரை இருந்து வருகிறார் விராட் கோலி.
இந்நிலையில், தற்போது டுவீட்டரில் 5 கோடி பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி பின்தொடர்பவர்களுடன் உலகின் 3வது பிரபலமான விளையாட்டு வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
கோலிக்கு 4.9 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் ரசிகர்களாக இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் கோலியை பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 31 கோடிக்கும் அதிகமாகி உள்ளது.
இந்த ஆண்டு கடையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கோலி முதல் டி20 சதமடித்து பார்முக்கு திரும்பியிருப்பது அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.