வாங்க சாப்பிடுங்க : விராட் கோலி பகிர்ந்த க்யூட் ஃபோட்டோ இணையத்தில் வைரல்
ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினாலும், சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட்கோலி அசத்தலான சதத்தை அடித்தார்.
விராட் கோலி அரை சதம்
அவரது சதம் இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது, இந்த நிலையில்விராட்கோலி சதமடித்ததை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

விராட்கோலி சதமடித்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில். விராட்கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
சிறுவயதில் விராட்கோலி ஒரு நிகழ்ச்சியில் உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இந்தி வாசகம் ஒன்றை ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.